மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கன மழையால் சேதமடைந்த பயிர்களுடன் விவசாயிகள் வாக்குவாதம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு சுமார் 67,000 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு 45 ஆயிரம் ஹெக்டேரில் நடவுப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் தீபாவளியை ஒட்டி ஒரு வார காலம் பெய்த கன மழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் நடவு செய்யப்பட்ட இளம் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின. ஏக்கருக்கு சுமார் 25,000 ரூபாய் செலவு செய்த விவசாயிகள் இதனால் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். பல்வேறு இடங்களில் வெள்ள நீர் வடிய தாமதம் ஏற்பட்டதால் இளம் பயிர்கள் நீரில் அழுகி சேதம் அடைந்தன. இந்