தண்டையார்பேட்டை: ராயபுரம் சிக்னல் அருகே ஆட்டோவில் பள்ளிக்கு சென்ற மாணவனுக்கு விபத்து போக்குவரத்து போலீஸ் விசாரணை
ராயபுரம் சிக்னல் அருகே மைதீன் என்பவரின் மகன் முகமது பயாஸ் மற்றும் அவருடன் சக மாணவன் முகமது உபைதா ஆகியோர் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது ஆட்டோவின் குறுக்கே சிக்னலை மதிக்காமல் ஆக்டிவா வாகனத்தில் வந்த இளைஞர் குறுக்கே வந்ததால் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் முகமது ஃபயாஸ் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இது குறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.