ஆம்பூர்: மு.கா.கொல்லை பகுதியில் பலகோடி ரூபாய் பண பரிவர்த்தனை தொடர்பாக ஓய்வு பெற்ற காவலாளி வீட்டில் 10 மணிநேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை
ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட மு.கா. கொல்லை பகுதியில் தனியார் தோல் தொழிற்சாலையில் காவலாளியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற சபீர் என்பவரின் வீட்டில் சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் 10 மணி நேரம் சோதனை மேற்கொண்டதில் மோசடி கும்பல் சிலர் சபீர் வங்கி கணக்கை தங்களது வங்கி கணக்குடன் இணைத்து பலகோடி ரூபாய் பணம் பரிவர்த்தனை செய்தது தெரியவந்தது. மேலும் சில ஆவணங்களை கொண்டு சென்றுள்ளனர்.