கயத்தாறு: கயத்தாறில் உள்ள அருள்மிகு ஸ்ரீதேவி ஸ்ரீ பூதேவி சமேத திருவேங்கடமுடையான் கோவில் பிரம்மோற்சவ விழாவில் திருக்கல்யாண வைபோகம்
கயத்தாறில் உள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீதேவி ஸ்ரீ பூதேவி சமேத திருவேங்கடமுடையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வந்தது இதில் சிறப்பம்சமாக திருக்கல்யாண வைபோகம் வெகு விமர்சையாக நடைபெற்றது இதனை முன்னிட்டு சுவாமிக்கு பல்வேறு வகையான அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடைபெற்று திருக்கல்யாணம் நடைபெற்றது இதில் கயத்தாறு மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்