கொடைக்கானல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு வாய்தகராறு காரணமாக லோகநாதன் என்பவரை கொலை செய்த கொடைக்கானல் பூண்டியை சேர்ந்த முருகன் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு பழனி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நீதிபதி குற்றவாளி முருகன் என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.11,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்