பழனி: தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பக்தர்களின் வசதிக்காக மொபைல் ஏடிஎம் சேவை தொடங்கப்பட்டது
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக தற்காலிக பஞ்சாமிர்த நிலையம் கோவில் நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட நிலையில், மேலும் பக்தர்களின் வசதிக்காக பழனி மலை அடிவாரப் பகுதியில் வாகனத்தில் மொபைல் ஏடிஎம் சேவை இன்று தொடங்கப்பட்டது.