திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல்லில் கோர விபத்து: கார் மீது மோதிய தனியார் பேருந்து - குழந்தை படுகாயம்
திண்டுக்கல் அருகே கார் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில், தம்பதியினர் காயமடைந்த நிலையில் குழந்தை பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதிவேகமே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.