நத்தம்: கோபால்பட்டியில் தீபாவளி பண்டிகையை வருவதையொட்டி சந்தையில் ஆடு, கோழிகள் விற்பனை களை கட்டியது
திண்டுக்கல் -நத்தம் செல்லும் சாலையில் உள்ள கோபால்பட்டியில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம் . அக்டோபர் 20ம் தேதி தீபாவளி பண்டிகை வருவதையொட்டி சந்தைக்கு சுற்றியுள்ள பல ஊர்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள், வியாபாரிகள் இன்று ஆட்டு சந்தையில் குவிந்தனர். ஆடு ரூ.15 ஆயிரம் வரை விற்பனையானது. நாட்டுக்கோழி உயிருடன் கிலோ ரூ. 400 முதல் விற்பனையானது. சண்டை சேவல்கள் ரூ.8 ஆயிரம் வரை விற்பனையானது.