திண்டுக்கல் மேற்கு: அரசு நிலத்தை ஏமாற்றி விற்ற நபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.40 ஆயிரம் அபராதம் திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பு
திண்டுக்கல் கூட்டுறவு நகரை சேர்ந்த மங்களம் என்பவருக்கு போடியை சேர்ந்த கண்ணன் என்பவர், தேனியை அடுத்த மேகமலை பகுதியில் பட்டா நிலம் என்று கூறி அரசுக்கு சொந்தமான இடத்தை விற்பனை செய்தார் இது குறித்து மங்களம் திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில், கண்ணன், உடந்தையாக இருந்த 5 பேர் மீது புகார் கொடுத்தார். போலீசார் கண்ணன் உட்பட 6 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் நீதிபதி கண்ணனுக்கு 3 ஆண்டுகள் சிறை , ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மற்ற 5 பேரையும் விடுவித்தார்.