கொடைக்கானல் மலைப்பகுதியில் வாழும் மக்களுக்கு தமிழக அரசால் இலவச தரிசு நிலம் வழங்கப்பட்டு விவசாயம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. பள்ளங்கி கோம்பை பகுதியில் வசித்து வனராணிக்கு கொடுக்கப்பட்ட இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலத்தை மீட்டெடுப்பதற்கு 24 வருடமாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கொடைக்கானல் கோட்டாட்சியர், வட்டாட்சியர், காவல் நிலையம் என தொடர்ந்து பல முறை மனு அளித்தும் அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை