தண்டையார்பேட்டை: ராயபுரம் அரசு ஆர் எஸ் ஆர் எம் மருத்துவமனையில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு 40 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது
ராயபுரத்தில் உள்ள ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் வடசென்னை கிழக்கு மாவட்ட பாஜக இளைஞரணி சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று பிறந்த 40 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாஜக வடசென்னை கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் அணில் குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு மோதிரங்களை அணிவித்தார்