திருப்பத்தூர்: பூரிகமாணிமிட்டா பகுதியில் வசதி படைத்தவர்களுக்கு 35 கிலோ அரிசி கிடைக்க பெறும் AAY ரேஷன் கார்டு- கலெக்டர் அலுவலகத்தில் மனு
கலெக்டர் அலுவலகத்தில் பூரிகாமானிமிட்டா பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர் அந்த மனுவில் பூரிகமாணிமிட்டா பகுதியில் உள்ள கிளர்க்கு மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட வசதி படைத்த குடும்பத்தாருக்கு AAY எனும் ஏழை மக்களுக்கு வழங்கக்கூடிய 35 கிலோ அரிசி பெரும் ரேஷன் கார்டை இவர்கள் பெற்றுள்ளதாகவும். மேலும் ரேஷன்கடையிலிருந்து பெறக்கூடிய 35 கிலோ அரிசியை அருகே உள்ள ஏழை மக்களுக்கு விற்று செல்வதாகவும் மேலும் வசதி படைத்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த ரேஷன் கடை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் இருந்தது.