பழனி: பழனி அருகே பெட்ரோல் குண்டு வீசிய 3 வாலிபர்கள் கைது
பழநி, சாமிநாதபுரம் ஜி.வி.ஜி.,நகரில் கஞ்சா போதையில் தகராறு செய்ததால் அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் கோபமடைந்த மூவரும் ராமாத்தாள் என்பவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசினர். அதனை தொடர்ந்து உலகநாதன் என்பவரின் கார் கண்ணாடியை கல் வீசி உடைத்தனர். வயலூர் பகுதியில் இருந்த பேக்கரி கண்ணாடியை உடைத்து, அதே பகுதியில் சேர்ந்த சீனிவாசன் என்பவரை தாக்கி விட்டு தப்பி ஓடினர். சாமிநாதபுரம் சார்பு ஆய்வாளர் தலைமையிலான போலீசார் 3 பேரை கைது செய்து விசாரணை