கொடைக்கானல்: கொடைக்கானலில் கனமழை: அடுக்கம் - பெரியகுளம் சாலை துண்டிப்பு!
கொடைக்கானலில் பெய்த கனமழையால் அடுக்கம் - பெரியகுளம் சாலையில் 3 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு, சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. கிராமத்திற்குள் புகுந்த மழைநீர், சாலையை முற்றிலுமாக சேதப்படுத்தியுள்ளது. சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.