போடிநாயக்கனூர்: மழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய சாக்கடை நீர் - பொதுமக்கள் அவதி
போடிநாயக்கனூர் நகர் பகுதியில் பெய்த 20 நிமிட மழையால், பெருமாள் கோவில் பேருந்து நிறுத்தம் அருகே சாக்கடை கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடியது. துர்நாற்றத்தாலும், கழிவுகளாலும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.