தண்டையார்பேட்டை: ராயபுரம் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அசாம் இளைஞர்கள் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர், எம்.பி. எம்.எல்.ஏ.
ராயபுரம் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் எண்ணூர் அனல் மின் நிலையத்தில் கட்டுமான பணியின் போது உயிரிழந்த அசாம் இளைஞர்கள் ஒன்பது பேரின் உடலைகளுக்கு இன்று சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி, ஸ்டான்லி முதல்வர் அரவிந்த் ஆகியோர் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி பிரேதங்களை அனுப்பி வைத்தனர்.