நீடாமங்கலம்: கோவில்வெண்ணி பகுதியில் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட கோவில் வெண்ணி பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இந்திய தானிய சேமிப்பு மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை இயக்குனர் பி கே சிங்க் தலைமையிலான மத்திய குழுவினர் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்