கொடைக்கானல் வனஉயிரின சரகத்திற்கு உட்பட்ட கொடைக்கானல், பூம்பாறை, மன்னவனூர், தேவதானப்பட்டி, பெரும்பள்ளம் உள்ளிட்ட 7 வன சரகங்களில் அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பு பணி துவங்கியது. இப்பணிகள் 6 நாட்கள் நடைபெறுவதாகவும் 200-க்கும் மேற்பட்ட தானியங்கி கேமராக்கள் அமைக்கப்பட்டு புலிகள் கணக்கெடுப்பு பணியானது நடைபெறுகிறது மேலும் அனைத்து விலங்குகளின் கால்தடம், எச்சங்கள் கேமரா பதிவுகள் மூலம் பதிவு செய்வதாகவும் தெரிவித்தனர்