தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சக்கரத்தாழ்வார் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில் ஆறாவது ஆண்டு வருஷாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது இதனை முன்னிட்டு அதி காலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது தொடர்ந்து கும்ப கலசத்திற்கு கும்பநீரானது புதன்கிழமை முற்பகல் ஊற்றப்பட்டது இதில் சிறப்பு அழைப்பாளராக கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தார்