அம்பாசமுத்திரம்: கல்லிடைக்குறிச்சி திம்மராஜபுரம் பழைய பாலத்தை இடிக்க முயன்ற அதிகாரிகளை தடுத்த பொதுமக்கள் பரபரப்பு
கல்லிடைக்குறிச்சி அருகே திம்ம ராஜா பகுதியில் உள்ள பழைய பாலத்தை இடிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் இடிக்க வந்த போது அதனை இடிக்கக்கூடாது என பொதுமக்கள் தடை செய்தனர் இதை அடுத்து இன்று காலை 11:30 மணி அளவில் சார் ஆட்சியர் வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அங்கு வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர் பின்னர் கல்லிடைக்குறிச்சி துணை தலைவர் இசக்கி பாண்டியன் பொதுமக்களுடன் ஆலோசனை நடத்தி உரிய தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தார் இதை அடுத்து பொதுமக்கள் அமைதியாக சென்றனர்