பழனி தெரசம்மா காலனி சேர்ந்த சின்னதம்பி (எ) தோமையார் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது வீட்டில் அருகே உள்ள நெப்போலியன் என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமின் பெற்று வெளியே வந்தார். நேற்று இரவு கோதைமங்கலம் மதுபானக்கூடம் அருகே கத்தியால் குத்தி, தலையில் கல்லை போட்டு படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து பழனி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவா, சூர்யா, முத்து உள்ளிட்ட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்