கயத்தாறு: கயத்தாறு பைபாஸ் சாலையில் உள்ள பாலம் அருகே வீணாகும் குடிநீரால் பொதுமக்கள் வேதனை
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் கோவில்பட்டிக்கு செல்லும் கூட்டுக் குடிநீர் திட்ட பைப் லைன் கயத்தாறு பைபாஸ் சாலை அருகே அமைந்துள்ள பாலத்தின் அருகே ராட்சத இரும்புக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஓடையில் கலந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் இதை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.