வேப்பந்தட்டை: பெரம்பலூரில் வனவிலங்கு வேட்டை: நாட்டுத் துப்பாக்கிகளுடன் 3 பேர் கைது, 8 பேருக்கு வலை!
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை காப்புக்காடு பகுதிகளில் வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 3 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. தப்பி ஓடிய மேலும் 8 பேரை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.