நாமக்கல்: நாமக்கல் நகராட்சி பூங்கா சாலையில் இன்று மாவட்ட ஆட்சியர் உமா தலைமையில் சிலம்பம் கலைஞர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
நாமக்கல் நகராட்சி பூங்கா சாலையில் இன்று (6.4.2024) மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப அவர்கள் தலைமையில், தேர்தல் பொதுப்பார்வையாளர், மாவட்ட காவல் கண்காணிபளர் ஆகியோர் முன்னிலையில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 75- க்கும் மேற்பட்ட சிலம்பம் கலைஞர் பங்கேற்று சுமார் 30 நிமிடம் சிலம்பம் சுற்றியவாறு பொதுமக்களுக்கு தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்