வாணியம்பாடி: நகர காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவலருக்கு திடீர் நெஞ்சுவலி உடனடியாக வாகனத்தை தானே ஓட்டி வந்து மருத்துவமனையில் அனுமதித்த காவல் ஆய்வாளர்
வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வரும் தனலட்சுமி என்பவருக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. பின்னர் உடனடியாக பணியில் இருந்த காவல் ஆய்வாளர் ஆனந்தன் அதிவேகமாக காவல்துறையினர் வாகனத்தை ஒட்டி வந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் தற்போது தலைமை காவலர் தனலட்சுமி வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.