பழனி: பெரியப்பா நகரில் உள்ள நகராட்சி உரக்கிடங்கு பகுதியில் டிரான்ஸ்பார்மர் தீப்பொறி பட்டு தீ விபத்து ஏற்பட்டது
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கு பெரியப்பா நகரில் உள்ளது. இந்த இடத்துக்கு அருகே இருந்த ட்ரான்ஸ்பார்மர் இன்று காலை வெடித்ததில் அதிலிருந்த தீப்பொறி கட்டி வைக்கப்பட்ட குப்பைகள் மீது விழுந்தது. இதை அடுத்து மளமள வென பரவி தீ கொழுந்துவிட்டு எரிந்தது.. தரம் பிரித்து வைத்த குப்பைகள் மீது தீ வேகமாக பரவி எறிந்தது.