ஜமுனாமரத்தூர்: ஜவ்வாது மலை பீமன் நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்: தண்ணீர் ஆர்ப்பரிப்பு
திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் பீமன் நீர்வீழ்ச்சியில் தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. விடுமுறையை முன்னிட்டு இன்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனர். பூங்கா மற்றும் பண்டைய காலச் சின்னங்களையும் பார்வையிட்டனர்.