பெரம்பலூர்: 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூர் மாவட்டத்தில் 18 வயது நிரம்பிய இளைய வாக்காளர்கள், படிவம்-6 மூலம் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு பெற்றோர் குறித்த உறுதிமொழி படிவம் தேவையில்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பெரம்பலூர் மற்றும் குன்னம் தொகுதிகளில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.