மயிலாடுதுறை: கிடங்கள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி எதிரே சாலையில் அமர்ந்து காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் குடிநீர் உட்பட அடிப்படை வசதிகள் செய்து தர
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கிடங்கல் ஊராட்சி மேலதெரு, கீழத்தெரு, வடக்கு தெரு, தெற்கு தெரு, உள்ளிட்ட கிராமங்களைச் சார்ந்த பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக குடிநீர் வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டி கிடங்கள் பகுதியில் இருந்து ஆக்கூர் செல்லக்கூடிய பிரதான சாலையில் கிடங்கள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி எதிரே சாலையில் அமர்ந்து காலி குடங்களுடன் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்