திருப்பத்தூர்: பேராம்பட்டு அருள்மிகு ஶ்ரீ சென்னகேசவ பெருமாள் கோயிலுக்கு புதிய அறங்காவலர்கள் நியமிக்க வேண்டும் என கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் பேராம்பட்டு பகுதியில் மிகவும் புகழ் பெற்ற அருள்மிகு ஶ்ரீ சென்னகேசவ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோயிலுக்கு சுமார் 200 ஏக்கர் நிலம் உள்ளது. மேலும் இந்த கோயில்களை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் புதிய அறங்காவலர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர்.