பெரம்பலூர்: கல்பாடி ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு - பொதுமக்கள் கோரிக்கைகள் ஏற்பு!
பெரம்பலூர் மாவட்டம் கல்பாடி ஊராட்சியில், 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ப.அப்துல் ராசிக் பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் கள ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.