கோவில்பட்டி: மந்தித்தோப்பு பகுதி மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் மனு வழங்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர்
மந்திதோப்பு அருகே உள்ள துளசிங்க நகர் ராஜகோபால் நகர் கணேஷ் நகர் பகுதி மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா உடனடியாக வழங்க வேண்டும் என கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் மந்திதோப்பு பகுதியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமில் தாலுகா குழு செயலாளர் பாபு தலைமையில் அப்பகுதி மக்கள் ரேஷன் கடை அருகில் இருந்து ஊர்வலமாக வந்து உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மனு வழங்கினர்.