தூத்துக்குடி மாவட்டம் ஊத்துப்பட்டியில் மழை பெய்த காரணத்தினால் சாலையில் உள்ள பள்ளத்தில் மழை நீர் தேங்கி இருந்தது இந்நிலையில் அவ்வழியாக விவசாய வேலை முடித்துவிட்டு சைக்கிளில் சென்று கொண்டிருந்த விவசாயி முத்து மழை நீர் தேங்கி இருந்த பள்ளத்தில் நிலை தடுமாறி விழுந்துள்ளார் இதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது உடனடியாக அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.