சிவகங்கை: ஊத்திக்குளம் பகுதியில் கஞ்சா வைத்திருந்த இளைஞர் மீது வழக்கு
சிவகங்கைத் தாலுகா காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சிவப்பிரகாஷ். அவர் ஊத்திக்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது, ஆண்டாள்புரம் பகுதியைச் சேர்ந்த தஹ்ரிஹரன் (24) என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அவரை நிறுத்தி சோதனை செய்தபோது, அவரிடம் இருந்து சுமார் 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது