பழனி: ஜவகர் நகரில் உணவு பாதுகாப்பு அலுவலரை தாக்கிய மளிகை கடைக்காரர் கணவன் மனைவி கைது செய்து 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைப்பு
பழனி ஜவகர் நகரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதை அடுத்து அதிகாரிகள் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்ய முயன்றனர். அப்போது ஆவேசம் அடைந்த கடை உரிமையாளர் ராஜவடிவேல் அவரது மனைவி தமிழரசி உணவு பாதுகாப்பு அலுவலரையும் உதவியாளர் கருப்புசாமியும் தாக்கி காயப்படுத்தியுள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உதவியுடன் உணவு பாதுகாப்பு அதிகாரி அந்த கடைக்கு சீலிட்டனர். தொடர்ந்து கடை உரிமையாளருக்கு 50,000 அபராதம்.