வேலூர்: வேலூரில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்: தேர்தல் ஆணையர் உருவபொம்மை எரிப்பால் பரபரப்பு
வேலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே தேர்தல் ஆணையரை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது உருவபொம்மை எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் போதிய காவலர்கள் இல்லாதது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.