கோவில்பட்டி: சார் ஆட்சியர் அலுவலகத்தை தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் நிவாரணத் தொகை வழங்கக்கோரி முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்
கடந்த 2024 ஆம் ஆண்டு மலையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் நிவாரணத் தொகை உடனடியாக வழங்க வேண்டும் எனக் கோரி தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் தலைவர் ஓ.ஏ நாராயணசாமி தலைமையில் கோவில்பட்டி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார் தொடர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் கோரிக்கை மனுவினை சார் ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினர்.