அம்பத்தூர்: சென்னையில் டெங்கு பாதிப்பு: 100 இடங்களில் மருத்துவ முகாம்கள் - மாநகராட்சி அறிவிப்பு
சென்னையில் செப்டம்பரில் 1,293 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், நோய் பரவலைக் கட்டுப்படுத்த தினமும் 100 இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்த மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.