துறையூர்: உப்பிலியாபுரம் அருகே நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் மோதி பட்டதாரி வாலிபர் பலியானார்
துறையூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்துவிட்டு வேலை தேடி வந்தவர் அரவிந்தன். இவர் நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் கடைவீதியில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது துறையூர் தம்மம்பட்டி சாலையில் உப்பிலியபுரத்தில் சாலையோரம் இருசக்கர வாகனத்தில் நின்று பேசிக் கொண்டிருந்த முதியவர் வைத்திருந்த வாகனத்தில் மோதி கீழே விழுந்து இறந்தார்.