சத்தியமங்கலம்: பண்ணாரி சோதனைச்சாவடி: ஸ்கூட்டரில் மது கடத்திய 2 பேர் கைது
ஈரோடு மாவட்டம் பண்ணாரி சோதனைச்சாவடியில், ஸ்கூட்டரில் கர்நாடக மதுபாட்டில்களை கடத்தி வந்த கோபியைச் சேர்ந்த குமரவேல் மற்றும் கார்த்திக் ஆகிய 2 பேரை சத்தியமங்கலம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 209 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.