செங்கம்: செங்கம் பஜார் வீதியில் ஆயுத பூஜை கூட்டம்: கடும் போக்குவரத்து நெரிசல்
ஆயுத பூஜையை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பஜார் வீதியில் பூ, பழங்கள் வாங்க மக்கள் கூட்டம் கூடியதால் திருவிழா போல் களைகட்டியுள்ளது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் கூட்டத்தில் சிக்கி தவித்து வருகின்றனர்.