திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல்லில் பேருந்தில் 3 கிலோ கஞ்சா கடத்தல்: 2 வாலிபர்கள் அதிரடி கைது
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் ஈரோட்டில் இருந்து பேருந்தில் கடத்தி வரப்பட்ட 3 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மேற்கு மரியானாதபுரத்தைச் சேர்ந்த சுரேந்திரன் மற்றும் நாகராஜ் ஆகிய இருவரை கைது செய்து திண்டுக்கல் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.