கோவில்பட்டி: தாலுகா அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தியாகி விஸ்வநாததாஸ் காலனி பகுதியில் பொது இடத்தை ஆக்கிரமிப்பு செய்த தனி நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.