தண்டையார்பேட்டை: காசிமேடு மீன் சந்தையில் இன்று புரட்டாசி மாதம் மாலைய அமாவாசை காரணத்தால் மீன் பிரியர்கள் கூட்டம் இன்றி உள்ளது
காசிமேடு மீன் சந்தையில் இன்று புரட்டாசி மாதம் அமாவாசை முன்னிட்டு மீன் பிரியர்கள் கூட்டம் இல்லாமல் கலை இழந்து காணப்படுகிறது வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை முதலே மீன் வாங்க கூட்டம் அதிகமாக காணப்படும் அதேபோன்று சில்லறை விற்பனை கடைகள் இந்த வாரம் அதிகமாகவே காணப்பட்ட நிலையில் சிறிய வகை பெரிய வகை மீன்கள் என வரத்து அதிகமாக இருந்தும் மீன் வாங்க மீன் பிரியர்கள் இல்லாததால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.