கோவில் சீரமைப்பு பணி நடைபெற்று வந்த நிலையில் 3 மாதங்களுக்கு மேலாக மூலவர் தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் கும்பாபிஷேக பணி முடிந்து கடந்த சில தினங்களாக மூலவர் ஏகாம்பரநாதர் தரிசிக்க பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு தரிசனம் மேற்கொள்ள காஞ்சிபுரம் மட்டும் இல்லாமல் சுற்று வட்டார பகுதியில் மற்றும் வெளி மாநிலத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்திருப்பதால் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.