திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல்: மின்சாரம் தாக்கி 2 பசுமாடுகள் பலி - அலட்சியம் காட்டிய மின்வாரியம்!
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் கணபதி நகரில் ஓடைக்கு தண்ணீர் குடிக்க சென்ற 2 பசுமாடுகள், அறுந்து கிடந்த மின் வயர் மீது மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தன. மின்வாரிய ஊழியர்கள் அலட்சியமாக செயல்பட்டதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.