பழனி: 9 நாட்கள் தங்க தேர் புறப்பாடு நடைபெறாது பழனியில் காப்பு கட்டுதலுடன் நவராத்திரி விழா தொடங்கியது
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் மற்றும் அதன் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. பழனி மலைக் கோவிலில் உச்சிக்கால பூஜையில் விநாயகர், மூலவர், சின்னக்குமாரர், சண்முகர், வள்ளி-தெய்வானை, துவார பாலகர்கள், நவவீரர்கள் ஆகிய தெய்வங்களுக்கு காப்பு கட்டப்பட்டது. மலைக்கோவிலில் 9 நாட்கள் தங்க தேர் புறப்பாடு நடைபெறாது 2.10.2025 அன்று வழக்கம் போல தங்கரத புறப்பாடு நடைபெறும் என அறிவிப்பு