கோவில்பட்டி: அய்யனேரி கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு கோகுல கண்ணன் பஜனை மடத்தில் கும்பாபிஷேக விழா
கோவில்பட்டி அருகே உள்ள ஐயனேரி கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு புதிதாக கட்டிய கோகுல கண்ணன் பஜனை மடத்தின் கும்பாபிஷேக விழா நடைபெற்றது இதனை முன்னிட்டு 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டது தொடர்ந்து பல்வேறு புண்ணிய நதியில் இருந்து எடுத்துவரப்பட்ட நீரானது கோகுல கண்ணன் படத்திற்கு தெளிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.