பாளையங்கோட்டை: மேலப்பாளையம்: போதை நபர்களுக்கு திருமண NOC கிடையாது - ஜமாஅத் அதிரடி முடிவு
மேலப்பாளையம் ஹாமீம்புரம் பகுதியில் போதை பழக்கத்திற்கு எதிராக ஜமாஅத் நிர்வாகம் முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. இனி போதை நபர்களுக்கு திருமணம் உள்ளிட்ட காரியங்களுக்கு NOC வழங்கப்படாது. மேலும் அக்டோபர் 25 அன்று விழிப்புணர்வு பேரணி நடைபெறவுள்ளது.