திருப்பத்தூர்: கோட்டை பிரமேஸ்வரர் கோயிலில் திருவாசகம் முற்றோதுதல் நடந்தது
திருப்பத்துாரில் உள்ள கோட்டை பிரமேஸ்வரர் கோயிலில், திருவாசகம் முற்றோதல் நடந்தது. இதனைத் தொடர்ந்து தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு கால பைரவ சுவாமிக்கு திரவிய அபிஷேகம் ,கலச அபிஷேகம் ஆராதனை நடந்தது.நிகழ்ச்சி ஏற்பாடு திருவண்ணாமலையார் அம்மை அப்பன் திருப்பாத திருப்பணி உழவாரப்பணி குழுவினர் செய்திருந்தனர். திருவாசகம் முற்றோதுதலை முன்னிட்டு சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.